/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
ADDED : ஆக 26, 2024 02:26 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில், காவிரி ஆற்றின் நடுவே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணைக்கு, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கதவணை வழியாக டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. மேலும், கதவணையில் சேமிக்கப்படும் நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன்-களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து வந்து விற்-பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன், காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதால், மீன்கள் பிடிக்க செல்லவில்லை. தற்போது, தண்ணீர் குறைவாக செல்வதால், மீண்டும் மீன்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஜிலேபி, கெண்டை மீன்கள் வரத்து அதிகளவில் உள்ளது. ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால் மீன், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், மாயனுார், லாலாப்-பேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்-களை வாங்கி சென்றனர்.