ADDED : ஆக 26, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த கல்லடை பஞ்., கீழவெளியூர் பஸ் ஸ்டாப் அருகே, அதே பகுதியை சேர்ந்த நவநீதன், 47, என்பவர், மனைவி பிரியா, தாயார் தனலட்சுமி ஆகியோருடன், தோகை-மலை - திருச்சி நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த தோகைமலை போலீசார், போராட்டத்தில் ஈடு-பட்டவர்களிடம், கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 5 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

