/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு
/
பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு
ADDED : ஜூலை 17, 2024 08:53 AM
குளித்தலை : குளித்தலை அருகே, பணியை செய்ய விடாமல் தடுத்த, பெண் ஊர்ப்புற நுாலகர் மீது வழக்குப்ப-திவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை அடுத்த காணியாளம்பட்டியில், ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில் குன்னச்சத்திரத்திலிருந்து புற நுாலகர் செந்தில்குமார், 44, மாவட்ட நுாலக அலுவலரின் செயல்முறை ஆணையின்படி, இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த, 9ம் தேதி காணியாளம்பட்டி நுாலகத்தில் ஊர்ப்புற நுாலக-ராக பணியில் இருந்து வந்தார். இங்கு பணியில் இருந்த புதுார் சுக்காம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி, 42, என்பவர் சின்னப்பனையூர் ஊர்ப்-புற நுாலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்-பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் நுாலகர் செந்தில்கு-மாரை பணி செய்யவிடாமல் தடுத்தும், நுாலகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அரசு பணி செய்ய விடாமல் உமா மகேஸ்வரி இடையூறு செய்துள்ளார்.
இது தொடர்பாக, செந்தில்குமார் கொடுத்த புகார்-படி, நுாலகர் உமா மகேஸ்வரி மீது, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.