/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண் விரிவாக்க மையத்தில் பணம் இல்லா பரிவர்த்தனை
/
வேளாண் விரிவாக்க மையத்தில் பணம் இல்லா பரிவர்த்தனை
ADDED : செப் 08, 2024 01:08 AM
கரூர், செப். 8-
க.பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், பணம் இல்லா பரிவர்த்தனை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, க.பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வருவாய்த்துறை, பத்திரபதிவு துறையில் உள்ளது போல, வேளாண்மை துறையிலும், மின்னணு பரிவர்த்தனை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாய இடுபொருட்களை வாங்கும் போது, ஏ.டி.எம்., கார்டு, கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் இல்லா பரிவர்த்தனை செய்யலாம். க.பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நாளை முதல் பணம் இல்லாத பரிவர்த்தனை நடைமுறைக்கு வருகிறது. அதை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.