/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
/
தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
ADDED : ஆக 15, 2024 01:37 AM
கரூர்
கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம், பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று கிராமங்களில் மரகதப்பூஞ்சோலையை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்
கீழ் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம், பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று
கிராமங்களில், 71.47 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு ஹெக்டர் பரப்பில் பூஞ்சோலை உருவாக்கப்பட்டுள்ளது. 2,064 எண்ணிக்கையிலான தடி மரங்கள், பழ மரங்கள், மருத்துவ தாவர மரங்கள் நடவுசெய்யப்பட்டு, ஆழ் துளை கிணறு அமைக்கப்
பட்டுள்ளது.
இந்த மரகத பூஞ்சோலைகளில் ஆல், அரசு, அத்தி, நாவல், நெல்லி, நீர்மருது, பாதம், இலுப்பை, வில்லம், விளாம், பூவரசு, கொய்யா, மா, மகிழம், புன்னை, கொடுக்கா புளி, வேம்பு, புங்கன் முதலியன நடவு செய்யப்பட்டுள்ளது. தரகம்பட்டியில் அமைந்துள்ள மரகதப்பூஞ்சோலையை கலெக்டர்
தங்கவேல் பார்வையிட்டார்.
பஞ்., தலைவர் வேதவள்ளி, மாவட்ட வன அலுவலர் சண்முகம், தாசில்தார் இளம்பருதி உள்பட பலர் பங்கேற்றனர்.