/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
ADDED : செப் 16, 2024 03:24 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், பொதுமக்கள் நடைபாதையை, பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகரின் மைய பகுதியில் செயல்படும் பஸ் ஸ்டாண்டில் மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் நிறுத்தப்படும் இடத்தில் இருந்த வணிக வளாக கட்டடம் சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பொதுமக்கள், டவுன் பஸ் மற்றும் சேலம் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள வணிக வளாக கட்டட நடைபாதையில், மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்கி நிற்கின்றனர்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. அதேபோல், கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜவஹர் பஜார், மனோகரா கார்னர் கோவை சாலை, உழவர் சந்தை சாலை, தின்னப்பா கார்னர் சாலையில், நடைபாதையில் பல்வேறு வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளையும், மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவது இல்லை.
குறிப்பாக, முக்கிய சாலைகளின் நடைபாதையில், பல வணிக நிறுவனங்கள் சார்பில் ெஷட் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. விளம்பர போர்டுகளும், நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளன. அதை, கரூர் மாநகராட்சி அதிகாரிகள், அகற்றாமல் மெத்தனமாக உள்ளனர். இதனால், கரூர் நகரில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களால், நடைபாதையில் நடந்து கூட செல்ல முடியவில்லை.
எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள், நகரில் ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கோவை சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளையும், மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.

