sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு

/

முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு

முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு

முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு


ADDED : ஆக 01, 2024 07:28 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நிலம் அபகரிப்பு புகாரில், ஜாமினில் வெளிவந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார்.

கரூர் அருகே, தோரணகல்பட்டி, குன்னம்பட்டியில், பிரகாஷ் என்-பவரது மகள் ேஷாபனா பெயரில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான பத்திரம் மூலம், அபகரித்து கொண்டதாக எழுந்த புகாரில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கடந்த, 17ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து திருச்சி மத்-திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை விஜயபாஸ்கருக்கு, கரூர் ஜே.எம்., -1 நீதிமன்ற நீதிபதி பரத்-குமார், நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை, 5:30 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விடுவிக்-கப்பட்டார். பிறகு நேற்று இரவு, 8:30 மணிக்கு கரூர் வந்த விஜய-பாஸ்கர், லைட் ஹவுஸ் கார்னில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் திருவிகா, ஜெ.,பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனி-ருந்தனர்.






      Dinamalar
      Follow us