/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இ.எஸ்.ஐ.,யில் படுக்கை வசதி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
/
இ.எஸ்.ஐ.,யில் படுக்கை வசதி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
இ.எஸ்.ஐ.,யில் படுக்கை வசதி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
இ.எஸ்.ஐ.,யில் படுக்கை வசதி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 15, 2024 01:14 AM
இ.எஸ்.ஐ.,யில் படுக்கை வசதி
தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கரூர், செப். 15-
தொழில் நகரான கரூரில், படுக்கை வசதியுடன் கொண்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூரில் ஜவுளி நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் மற்றும் கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். தொழில் நிறுவனங்களில், மருத்துவ வசதிக்காக ஊதியம் பிடிக்கப்படும் நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு, சிகிச்சை அளிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது.
கரூரில் ரயில்வே ஸ்டேஷன் எதிரே, இயங்கி வரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை காலை, 7:00 முதல், 10:30 மணி வரையிலும், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரையிலும் இயங்கி வருகிறது. அதில் படுக்கை வசதி கிடையாது. இதனால், அவசர கால நோயாளிகள் திருச்சி அல்லது சேலம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதிநவீன ஸ்கேன் வசதியும் இல்லாததால், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
கரூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. சிறிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ஒரு சில டாக்டர்கள் மட்டும் பணியில் உள்ளனர். நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் வருவது இல்லை. மேல் சிகிச்சைக்காக சென்னை, சேலம், திருச்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த கரூரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் படுக்கை வசதியை ஏற்படுத்தி, நவீன மருத்துவ கருவிகளை அமைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.