/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடுப்பணை கட்ட ரூ.20 லட்சம் எம்.எல்.ஏ.,க்கு விவசாயிகள் நன்றி
/
தடுப்பணை கட்ட ரூ.20 லட்சம் எம்.எல்.ஏ.,க்கு விவசாயிகள் நன்றி
தடுப்பணை கட்ட ரூ.20 லட்சம் எம்.எல்.ஏ.,க்கு விவசாயிகள் நன்றி
தடுப்பணை கட்ட ரூ.20 லட்சம் எம்.எல்.ஏ.,க்கு விவசாயிகள் நன்றி
ADDED : பிப் 24, 2025 03:19 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார்-மேட்டு மருதுார் சிவாயம் கட்டு வாரியில் இருந்து, 500 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்திற்கு பாசன தண்ணீர் செல்கிறது. ஆனால், தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியவில்லை. விவசாயிகள், டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்று, குளித்-தலை சட்டசபை தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தடுப்பணை கட்ட, 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் சார்பில் எம்.எல்.ஏ., மாணிக்கத்திற்கு நன்றி தெரிவித்து கூட்டம் நடைபெற்றது. டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, மாஜி யூனியன் குழுத்தலைவர் தியாகராஜன், மாஜி மாவட்ட பஞ்.. குழு துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், நகர செயலாளர் ரவி மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்-டனர்.