/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி
/
ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி
ADDED : ஆக 08, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 58; புகழூர் காகித ஆலையில், (டி.என்.பி.எல்.,) லோடு மேனாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம், காகித ஆலையில் உள்ள, கழிப்பிடத்துக்கு சென்ற ஆறுமுகம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் ஆறுமுகம் உயிரிழந்தார். ஆறுமுகத்தின் மனைவி அஞ்சலை, 50, கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.