/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 01:37 AM
கரூர் : கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் ஓ.எச்.எப்.டி., ஆப்ரேட்டர்கள், துாய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொங்கல் கருணை தொகையாக, ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும். தொட்டியை துாய்மைப்படுத்த, 1,000 ரூபாய் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியா-ளர்களுக்கு, 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் கந்தசாமி, கணேசன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.