/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இனாம் நிலம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை; கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்
/
இனாம் நிலம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை; கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்
இனாம் நிலம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை; கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்
இனாம் நிலம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை; கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்
ADDED : ஆக 31, 2024 12:22 AM
கரூர்: ''இனாம் நிலம் தொடர்பாக, விரைவில் கிராமந்தோறும் பேச்சு-வார்த்தை நடத்தப்படும்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவ-லக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. தமிழக விவசாயிகள் பாது-காப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் வெஞ்சமாங்கூடலுார், புகழூர், வேலாயுதம்-பாளையம், வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலம், வீடு மற்றும் வீட்டுமனைகளை அறநிலையத்துறைக்கு சொந்தமானது என, அதிகாரிகள் விவசாயிகளை
விசாரணைக்கு வர சொல்கின்-றனர். சிலரது பட்டாக்கள் ரத்து செய்யப்படுகிறது. அறநிலையத்-துறை அதிகாரிகள், சட்ட விதிகளை மீறி, இனாம் நிலங்களை கையகப்படுத்துகின்றனர். நிலம் தங்களுக்கு சொந்தம் என்றால்,
உரிமையியல் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும். ஆனால், நேர-டியாக அறநிலையத்துறை அதிகாரிகள், இனாம் நிலம் உரிமையா-ளர்கள், விவசாயிகளை தொந்தரவு செய்கின்றனர்.அதை கண்டித்து, கரூரில் சமீபத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது, பேச்சுவார்த்தை நடத்-தலாம் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது. இதனால், விரைவில் பேச்சுவார்த்தையை
தொடங்க வேண்டும். அதுவரை, இனாம் நிலங்களை கையப்படுத்துவது தொடர்பாக, பணிகளை அறநிலையத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் நிறுத்த வேண்டும்இவ்வாறு பேசினார்.
பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:இனாம் நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, தேதி முடிவு செய்யப்படும் நேரத்தில், அரசு நிகழ்ச்சிகள் வந்து விடுகிறது. இதனால், தேதியை முடிவு செய்ய முடியவில்லை. இனாம் நிலம் தொடர்பான பிரச்னை குறித்து,
டி.ஆர்.ஓ., சென்னை சென்று உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளார். விரைவில், இனாம் நிலம் தொடர்-பாக கிராமந்தோறும், பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில், இரண்டு பிரதிநிதிகள் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். விவசா-யிகள்
அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு பேசினார்.பிறகு, 25க்கும் மேற்பட்ட இனாம் நில விவசாயிகள் கலெக்டர் தங்கவேலுவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது, டி.ஆர்.ஓ., கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனி-ருந்தனர்.
எட்டும் உயரத்தில் மின் பெட்டி திறந்து கிடப்பதால் ஆபத்துகரூர்: பசுபதிபாளையத்தில், சிறுவர்கள் எட்டும் உயரத்தில் மின் பெட்டி இருப்பதால், ஆபத்து காத்திருக்கிறது.
கரூர் ராமனுார், பசுபதிபாளையம் பிரிவு சாலை அருகில், மக்கள்-பயன்பாட்டுக்கு போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இங்குள்ள மின் கம்பத்தின் அருகில், மின் இணைப்பு பெட்டி திறந்தபடி உள்ளது. ஒயர், பியூஸ் கேரியர் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. சிறுவர்கள் தொட்டு விடும் துாரத்தில் மின் பெட்டி உள்ளது.இவ்வழியாக செல்லும் சிறுவர்கள், விளை-யாட்டுத்தனமாக திறந்து கிடக்கும் மின் பெட்டியில் உள்ள ஒயர்-களை தொட்டால், விபரீதம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஆபத்தான முறையில் திறந்து கிடக்கும் மின் இணைப்பு
பெட்டியை, பாது-காப்பாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.