/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
60 அடி சாலை ஆக்கிரமித்து, 20 அடியாக குறைந்தது போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : ஆக 22, 2024 01:43 AM
கரூர் தெற்கு காந்திகிராமத்தில் டபுள் டேங்க், 60 அடி சாலை சாலையை ஆக்கிரமித்து, 20 அடியாக குறைந்ததால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் தவித்து வருகின்றன.
கரூர், காந்திகிராமம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கடந்த, 1998ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள டபுள் டேங்க் அருகில், 60 அடி சாலையில் மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த சாலை வழியாக தினமும் நுாற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில், விநாயகர் கோவில் எதிரில் காய்கறி கடைகள் அமைத்துள்ளனர். இவர்கள் காலை, 10:00 மணிக்கு காய்கறிகளை விற்பனை செய்து விட்டு சென்று விடுவது வழக்கம்.
தற்போது சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து, நிரந்தரமாக கடைகளை அமைத்து விட்டனர். 60 அடிசாலை மெல்ல மெல்ல சுருங்கி, 20 அடி சாலையாக மாறி விட்டது. நடைமேடை முழுவதும் ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி விட்டனர். காலை நேரத்தில் நடை பயிற்சி செல்பவர்களுக்கு, ஓய்வெடுக்க வசதியாக சிமென்ட் இருக்கைகள் இருந்தன. அதனை, ஆக்கிரமித்து கடைகளை அமைத்து
விட்டனர்.
சாலை குறுகலாகி விட்டதால், பள்ளி வாகனங்கள், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் விபத்தில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.