/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையிடம் மனு
/
பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையிடம் மனு
ADDED : ஜூலை 23, 2024 01:35 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம், நடுப்-பட்டியில் இருந்து எல்லக்கரை வரை, 1,000 ஏக்கருக்கு மேற்-பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.
கடந்த, இரண்டு ஆண்டாக பாசன வாய்க்காலை, பொதுப்பணித்-துறையினர் துார்வார முன்வராததால், தேவஸ்தானம், எல்லக்-கரை, ஆரியம்பட்டியை சேர்ந்த விவசாயிகளே துார்வாரி வந்-தனர்.
தற்போது, துார்ந்துபோன பாசன வாய்க்காலை துார்வார விவசாயி-களிடம் போதிய நிதி இல்லாததால், பொதுப்பணித்துறையினர் துார்வார வேண்டுமென, எல்லக்கரை, ஆரியம்பட்டி, தேவஸ்-தானம் ஆகிய, மூன்று கிராம விவசாய சங்க தலைவர்கள் எல்லக்-கரை ரவி, கோவிந்தன், ஆரியம்பட்டி சந்திரன், முத்துவீரன், சண்-முகம், ஆறுமுகம், மாணிக்கம், சுந்தரம் மற்றும் விவசாயிகள், குளித்தலை பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளிர் பத்மாதே-வியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.