அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-.ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-.ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : அக் 01, 2026 03:04 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை சேர்ந்தவர்க-ளுக்கு, இ-.ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி
நடந்தது.
கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கட்டு-மானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள, இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு இ-.ஸ்கூட்டர் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 5 தொழிலாளர்களுக்கு தலா, 20,000 ரூபாய்- மானியத்தில் இ-.ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.
