/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் ரூ.40 கோடி சாலை மேம்பாட்டு பணிக்கு ஒதுக்கீடு
/
கரூர் மாவட்டத்தில் ரூ.40 கோடி சாலை மேம்பாட்டு பணிக்கு ஒதுக்கீடு
கரூர் மாவட்டத்தில் ரூ.40 கோடி சாலை மேம்பாட்டு பணிக்கு ஒதுக்கீடு
கரூர் மாவட்டத்தில் ரூ.40 கோடி சாலை மேம்பாட்டு பணிக்கு ஒதுக்கீடு
ADDED : பிப் 24, 2025 03:20 AM
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், சாலைகளை மேம்படுத்துவதற்காக, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,''என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:கிராம பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால், சாலை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதி-களை உருவாக்கி, தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக்கப்-பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில், சாலைகளை மேம்படுத்து-வதற்காக, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், கரூர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக உரு-வாகிடும் வகையில், அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், 11 பஞ்.,களுக்கு குப்பைகளை சேகரிக்கும், 35 மின்கல வாகனங்களையும், 14 பஞ்.,களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட, 65 பணித்தள பொறுப்பாளர்-களுக்கு உபகரணங்கள் உட்பட மொத்தம், 1.08 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வாங்கலில், வேளாண்துறை சார்பில் சிறுதானிய சிறப்பு திருவிழா கண்காட்-சியை திறந்து வைத்து, 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தியாகராஜன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்ரமணியம், வேளாண் வணிக துணை இயக்குனர் நிர்மலா உள்பட பலர் பங்-கேற்றனர்.

