ADDED : ஜூலை 29, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், வ.உ.சி., பேரவை தலைவர் மகேஷ்வரன் தலைமையில், குரு பூஜை விழா தனியார் திருமண மண்டபத்தில், நேற்று மாலை நடந்தது.
அதில், திருச்சி மண்டல ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் கிருஷ்ண பாலாஜி, ஆர்.எஸ்.எஸ்., தொடக்கம், கடந்த, 99 ஆண்டு கால ஆர்.எஸ்.எஸ்., பணிகள், எதிர்கால திட்டங்கள், காவி கொடியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது, மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் குமாரசாமி, எல்.ஐ.சி., காப்-பீடு ஆலோசகர் நடராஜன், நகர தலைவர் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.