/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : ஆக 20, 2024 02:56 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., பழைய மைலாடியில் அமைந்திருக்கும் லஷ்மி கணபதி, செல்லாயி அம்மன், வல்லப கணபதி, சக்தி மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோவில் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள், முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர்.
கடந்த, 17ல் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் பொது மக்கள், பக்தர்கள் எடுத்த வந்த தீர்த்தங்கள் கொண்டு யாகசாலையில் வைத்து, நான்கு கால யாக வேள்வி பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று காலை யாத்ராதனம், கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது.