/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வழியாக மைசூரு - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

ADDED : ஆக 26, 2024 02:16 AM
கரூர்: 'மைசூரு - செங்கோட்டைக்கு, கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது' என, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்-துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, கர்நாடகா மாநிலம், மைசூருவில் இருந்து செங்கோட்டை வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, மைசூருவில் இருந்து வரும் செப்., 4, 7ல் இரவு, 9:20 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06241) புறப்பட்டு மறுநாள் மாலை, 4:50 மணிக்கு செங்கோட்-டைக்கு செல்லும். இந்த ரயில் சேலத்துக்கு அதிகாலை, 5:40 மணிக்கும், நாமக்கல்லுக்கு காலை, 6:38 மணிக்கும் வரும். கரூ-ருக்கு காலை, 7:08 மணிக்கு வந்து விட்டு, 7:10 மணிக்கு புறப்-படும்.
அதேபோல், செங்கோட்டை - மைசூருவுக்கு சிறப்பு ரயில் (எண்: 06242) வரும் செப்., 5, 8ல் இரவு, 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:30 மணிக்கு மைசூரை அடையும். இந்த ரயில், நாமக்கல்லுக்கு அதிகாலை, 4:08 மணிக்கும், சேலத்துக்கு, 4:50 மணிக்கு வரும். கரூருக்கு அதிகாலை, 3:28 மணிக்கு வந்து விட்டு, 3:30 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.