/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் சாலையை கரூர் டி.ஆர்.ஓ., ஆய்வு
/
கிருஷ்ணராயபுரம் சாலையை கரூர் டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : ஆக 23, 2024 02:14 AM
கிருஷ்ணராயபுரம், ஆக. 23-
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணி நகர் பகுதியில் உள்ள சாலைகள் குறித்து கரூர் டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, மணி நகர் பகுதி மக்களுக்கு சாலை வசதி சரியாக இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாவட்ட டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமையில் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு, மழை காலங்களில் மக்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் சாலையை சரி செய்ய வேண்டும் என, டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், மண்டல துணை தாசில்தார் சந்தான செல்வம் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், டவுன் பஞ்சாயத்து அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.