ADDED : ஜூலை 06, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே புகளூரில் இருந்து, காவிரியாற்றுக்கு செல்லும் பம்ப் ஹவுஸ் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப் பகு-தியில் பல ஆண்டுகளாக தார் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.
மழைக்காலங்களில், சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகி-றது. பம்ப் ஹவுஸ் செல்லும் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்ககோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், சில மாதங்களுக்கு முன், சாலை அமைக்க சிமென்ட் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால், தார் சாலை அமைக்க-வில்லை.
அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளதால், புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.