/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிக மின்னழுத்தத்தால் டிவி, பிரிட்ஜ், பேன் 'டமார்'
/
அதிக மின்னழுத்தத்தால் டிவி, பிரிட்ஜ், பேன் 'டமார்'
அதிக மின்னழுத்தத்தால் டிவி, பிரிட்ஜ், பேன் 'டமார்'
அதிக மின்னழுத்தத்தால் டிவி, பிரிட்ஜ், பேன் 'டமார்'
ADDED : மார் 25, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை
அடுத்த மணத்தட்டை பஞ்., எழுநுாற்றுமங்கலம் கிராமத்தில், நேற்று
முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மேல் அதிகளவு மின்சாரம் வந்ததால்,
25க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பிரிட்ஜ், பேன், டிவி,
மின்விளக்கு வெடித்து சேதமடைந்தது.
இதில் பிரிட்ஜில் ஏற்பட்ட தீயால்
வீட்டில் இருந்த தையல் இயந்திரம், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து
நாசமாகின. தகவலறிந்து வந்த மின்வாரிய பணியாளர்கள்
டிரான்ஸ்பாரத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைத்து, மின்சார வினியோகம்
செய்தனர்.