/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குகை வழிப்பாதையை விரைந்து முடிக்க கிராம மக்கள் ஆலோசனை கூட்டம்
/
குகை வழிப்பாதையை விரைந்து முடிக்க கிராம மக்கள் ஆலோசனை கூட்டம்
குகை வழிப்பாதையை விரைந்து முடிக்க கிராம மக்கள் ஆலோசனை கூட்டம்
குகை வழிப்பாதையை விரைந்து முடிக்க கிராம மக்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 05, 2024 02:02 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் - மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி, கூடலுார், வலையப்பட்டி பகுதி மக்கள், மருதுார் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையில், கடந்த ஜூன், 20ல் மருதுார் - மேட்டுமருதுார் சாலையில் குகை வழிப்பாதை அமைக்கப்படுவதாகவும், மூன்று மாதத்தில் பணிகள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என, தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, ரயில்வே பாதையை மூடிவிட்டு தொடர்ந்து பணி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை, 17ல் குகை வழிப்பாதைக்கு ரயில்வே தண்டவாளத்தில் பாலம் அமைக்கப்பட்டது.
அதன்பின், ரயில்வே நிர்வாகம் மற்ற பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால், 10 கிலோ மீட்டர் துாரம் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில்வே நிர்வாகம் சார்பில், பணி முடியும் வரை டூவீலர், மக்கள் செல்ல, பட்டவர்த்தி குகை வழிப்பாதை வழியாக மாற்றுப்பாதை ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால், இதுவரை வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில், குகை வழிப்பாதையை காலக்கெடுவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வலியுறுத்தி மேட்டு மருதுாரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், காலக்கெடுவிற்குள் ரயில்வே நிர்வாகம், பணிகளை முடித்து, பொது மக்கள் பயண்பாட்டுக்கு விடவேண்டும்; தற்காலிகமாக பட்டவர்த்தி குகை வழிப்பாதையில் டூவீலர் சென்று வர பாதை அமைத்துக்கொடுக்க வேண்டும்; காலம் நீடிப்பு செய்து, கிராம மக்களை போராட ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் நிர்பந்திக்க கூடாது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.