/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரம் அருகே மது விற்ற பெண் கைது
/
சின்னதாராபுரம் அருகே மது விற்ற பெண் கைது
ADDED : பிப் 24, 2025 03:22 AM
அரவக்குறிச்சி,: சின்னதாராபுரம் போலீசார், நஞ்சைக்காளிக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள குங்குமாயி கோவில் அருகே காட்டு பகுதியில், கந்தசாமி என்பவரது மனைவி சின்னப்பொண்ணு, 50, என்பவர் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த, 4,860 ரூபாய் மதிப்புள்ள, 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்-தனர்.* அரவக்குறிச்சி போலீசார், வெஞ்சமாங்கூடலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முள்ளுக்காடு பகு-தியில், முருகன், 55, என்பவர் சட்டவிரோதமாக மது விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்தி-ருந்த, 5,400 ரூபாய் மதிப்புள்ள, 30 மது பாட்டில்களை அரவக்கு-றிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.