ADDED : பிப் 26, 2024 02:04 PM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி: சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வருதராஜ பெருமாள் கோவில் மாசி மாத தேர் திருவிழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா துவங்கியது.
இந்த தேர் மெயின் ரோடு வழியாக சென்று ஓம் சத்தி கோவில் அருகே நிறுத்தப்பட்டது. நேற்று மாலை மீண்டும் தேர் திருவிழா நடந்தது. இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
கிழக்கு கடை வீதி, மேற்கு கடைவீதி வழியாக சென்று நிலை நிறுத்தப்பட்டு, வருதராஜ பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நடந்தன.
