ADDED : பிப் 27, 2024 03:06 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாவட்ட மத்திய, மாநில தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், எல்.பி.எப்., மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது, துப்பாக்கி சூடு நடத்துவதை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் அப்பாசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் முருகேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜசேகர், ஆனந்தராஜ், குணாளன், சுடர் வளவன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
