நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, வயலுார் பஞ்., வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் வைரமணி, 42, கூலி தொழிலாளி.
இவரது மகள் தனியார் மருந்து கடையில் செவிலியராக வேலை செய்து வந்தார். கடந்த, 3ல் வீட்டில் இருந்தபோது மாலை, 5:00 மணியளவில் வெளியே சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.