நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கி.புரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று கோவில் சார்பில், பெரிய பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் சார்பில் காவிரி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமானோர் நேற்று காலை, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, புனித தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்தபடி லாலாப்பேட்டை, சந்தைப்பேட்டை வழியாக சிந்தலவாடி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பூஜை நடந்தது. வரும், 18ல் திருத்தேரில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.