நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை செய்த நிலையில், பஞ்சப்பட்டியில், 25 மி.மீ., அளவு பதிவாகி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, தென் இந்திய பகுதி மற்றும் ராயல்சீமா, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும், 8 வரை வட தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன்படி, கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை, 8.00 மணி வரை மழை பதிவாகி உள்ள இடங்கள்: அரவக்குறிச்சியில், 11.40 மி.மீ., அணைபாளையம், 5, க.பரமத்தி, 11.40, தோகைமலை, 5, பஞ்சப்பட்டி, 25, கடவூர், 5, பாலவிடுதி, 8, மைலம்பட்டியில், 12 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.