நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மாயனுாரில், 55 மி.மீ., மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில், பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 8 ல் அறிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 9 முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) குளித்தலை, 6, தோகமலை, 16, கிருஷ்ணராயபுரம், 50, மாயனுார், 55 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 10.55 மி.மீ., மழை பதிவானது.

