ADDED : அக் 04, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, நாகம்பள்ளி பஞ்., மலைக்கோவிலுார் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர்.
அப்போது அங்கு சுற்றித்திரியும் தெருநாய்கள், மாணவர்களை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் ஒருவித பதற்றத்துடனேயே பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் துரத்தி செல்வதால் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அரவக்குறிச்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.