ADDED : ஏப் 11, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நேற்று காலை மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது
. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு பூஜை நடந்தது. சிந்தலவாடி சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
