தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சியில் கனமழை

அரவக்குறிச்சியில் கனமழை

அரவக்குறிச்சியில் கனமழை


ADDED : மே 09, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணியிலிருந்து அதிகாலை 6:00 மணி வரை கனமழை பெய்தது. மழையால் உஷ்ணம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், சேங்கல், மாயனுார், மணவாசி, பாலராஜபுரம், கட்டளை, ரெங்கநாதபுரம், கொம்பாடிப்பட்டி, வல்லம், கொசூர், மைலம்பட்டி, கடவூர், பழைய ஜெயங்கொண்டம் கிராமங்களில் மழை கொட்டியது. இந்த மழையால் மரவள்ளிக்கிழங்கு, சோளம், வெற்றிலை, நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us