தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பள்ளியில் விழிப்புணர்வு

பள்ளியில் விழிப்புணர்வு

பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : ஜூன் 05, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் துவக்க நாளை முன்னிட்டு, மாணவியருக்கான பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

அரவக்குறிச்சி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், துவக்க நாளை முன்னிட்டு அரவக்குறிச்சி டி.எஸ்.பி., பானு, எஸ்.எஸ்.ஐ., மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் டி.எஸ்.பி., பானு,'பெண்கள் நாட்டின் கண்கள் என்ற தலைப்பில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு குறித்து, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். பெண்கள் மற்றும் மாணவியர் தைரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

துவக்க நாளான நேற்று மாணவியருக்கு பாட புத்தகங்கள், புத்தகப்பை, நோட்டுகள், கணித உபகரண பெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் முத்தையா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ஜி.ஆர். மனோகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மருத பாண்டியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us