ADDED : ஜூன் 29, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம்
கிராமத்தில் உள்ள பகவதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி,
பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிள்ளபாளையம் மங்கம்மாள் சாலை அருகில் பகவதியம்மன் கோவில்
உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை லாலாப்பேட்டை
காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம்
எடுத்துக்கொண்டு லாலாப்பேட்டை, பிள்ள பாளையம் சாலை வழியாக கோவிலை
அடைந்தனர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு
நடந்தது. விழாவில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து
அம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை
காட்டப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
