தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி குறும்படம் வெளியீடு

100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி குறும்படம் வெளியீடு

100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி குறும்படம் வெளியீடு


ADDED : ஏப் 10, 2024 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்தில், 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல், குறும் படத்தை வெளியிட்டு கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். கையெழுத்து இயக்கம், செல்பி பாய்ன்ட் மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல தபால் நிலையங்களில், 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி, அஞ்சல் கவர்களில் விழிப்புணர்வு சீல் வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us