/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ௪ பேர் மாயம்
/
கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ௪ பேர் மாயம்
ADDED : ஆக 18, 2024 03:02 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில், நான்கு பேர் ஒரே நாளில் மாயமானதாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த லோக-நாதன் மனைவி பூங்கொடி, 28; மகள் அனய்யா, 2; குடும்ப தக-ராறு காரணமாக கடந்த, இரண்டு மாதங்களாக கணவர் லோக-நாதனை பிரிந்து, லிங்கத்துாரில் உள்ள தாய் தங்கம்மாள், 50; வீட்டில் பூங்கொடி குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 13 ல் வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியே சென்ற, பூங்கொடி திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் தங்கம்மாள் போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் மாவட்டம், வெங்கமேடு வி.வி.ஜி., நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் கேசவன், 38; டெக்ஸ் தொழிலாளி. இவ-ருக்கும், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த பூர்-ணிமா தேவி, 30; என்பவருக்கும் கடந்த, 40 நாட்களுக்கு முன் திரு மணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த, 16 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பூர்ணிமா தேவி, திரும்பி வரவில்லை. பெற்றோர் வீட்டுக்கும், பூர்ணி மாதேவி செல்லவில்லை. இதுகுறித்து, கணவர் கேசவன் கொடுத்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 40; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 15 ல் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடு-களுக்கும் பொன்னுசாமி செல்லவில்லை. இதனால், பொன்னுசா-மியின் மனைவி ஜெயா, 38; போலீசில் புகார் செய்தார்.
சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.