/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
12ல் மரவள்ளி பயிரில் நோய் குறித்து இலவச பயிற்சி
/
12ல் மரவள்ளி பயிரில் நோய் குறித்து இலவச பயிற்சி
ADDED : ஜூன் 08, 2024 02:56 AM
நாமக்கல்: 'வரும், 12ல் மரவள்ளி பயிரில் ஒருங்கிணைந்த நோய் மேலாண் குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 12 காலை, 10:00 மணிக்கு, 'மரவள்ளியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில், மரவள்ளி பயிரை தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்தும் முறைகள், உழவியல் முறை, கைவினை முறை,
உயிரியல் முறை, இயற்கை முறை, ரசாயன முறை மற்றும் வளர்ச்சி யூக்கிகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான நவீன தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கப்படுகிறது. அதில், விவசாயிகள், ஊரக மகளிர் மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும் ஆர்வம் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், 04286 -266345, 266650 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.