/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் 2 மையங்களில் 'நீட்' தேர்வு 1,878 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
கரூரில் 2 மையங்களில் 'நீட்' தேர்வு 1,878 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கரூரில் 2 மையங்களில் 'நீட்' தேர்வு 1,878 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கரூரில் 2 மையங்களில் 'நீட்' தேர்வு 1,878 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : மே 06, 2024 02:23 AM
கரூர்: கரூரில், இரண்டு மையங்களில் நடந்த, 'நீட்' தேர்வை, 1,878 மாணவ, மாணவியர் எழுதினர்.
நாடு முழுதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., - -பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, நேற்று நடந்தது. இதில், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 736 மாணவ, மாணவியர், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொங்கு அறிவியல் கலைக்கல்லுாரியில், 1,200 மாணவ, மாணவியர் என மொத்தம், 1,936 பேர், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அதில், கொங்கு அறிவியல் கலைக்கல்லுாரியில், 1,172 பேரும், வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 706 பேரும் என மொத்தம், 1,878 பேர் தேர்வு எழுதினர். 58 பேர் தேர்வு எழுதவரவில்லை, கடும் வெயில் காரணமாக, காலை, 11:00 மணி முதலே மாணவ, மாணவியர் வரத்தொடங்கினர்.
கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், மாணவ, மாணவியர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்கு முன்பாக பந்தல்கள் அமைக்கப்படாததால் தேர்வறைக்குள் செல்வதற்காக காத்திருந்த மாணவ, மாணவியர் அங்குள்ள மர நிழலில் ஒதுங்கி நின்று சென்றனர்.