/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீலமேக பெருமாள் கோவிலில் 18ம் ஆண்டு திருபவித்திர உற்சவம்
/
நீலமேக பெருமாள் கோவிலில் 18ம் ஆண்டு திருபவித்திர உற்சவம்
நீலமேக பெருமாள் கோவிலில் 18ம் ஆண்டு திருபவித்திர உற்சவம்
நீலமேக பெருமாள் கோவிலில் 18ம் ஆண்டு திருபவித்திர உற்சவம்
ADDED : ஆக 18, 2024 03:19 AM
குளித்தலை: குளித்தலை நீலமேக பெருமாள் கோவிலில், 18ம் ஆண்டு திரு-பவித்திர உற்சவ விழா நடந்து வருகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், இரண்டாம் நாளான, நேற்று மாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அணிந்திருந்த கிளி மாலையை கோவில் அர்ச்சகர் மூலம் கொண்டுவரப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளையில் பணியாற்றும், மத்-திய அரசு மூத்த வக்கீல் நந்தகுமார் இல்லத்திற்கு வரவழைக்கப்-பட்டது. அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின், நீலமேக பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்-டது. அங்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.தொடர்ந்து, ஆண்டாள் மாலைக்கு சிறப்பு பூஜை செய்து, பெரு-மாளுக்கு அணிவிக்கப்பட்டது. சுவாமி, முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.