ADDED : ஆக 17, 2024 04:58 AM
குளித்தலை: கரூர் அடுத்த சணப்பிரட்டி, செல்வா நகரை சேர்ந்தவர் துரைசாமி, 59; மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மகள் லலிதா, 33, மனவாசியில் குடியிருந்து வருகிறார். கடந்த, 11ல், மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற துரைசாமி, அங்கு செல்லவில்லை.
உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க-வில்லை. காணாமல் போன தந்தையை மீட்டு தரக்கோரி, மகள் லலிதா அளித்த புகார்படி, மாயனுார் போலீசார், துரைசாமியை தேடி வருகின்றனர்.
மகள் மாயம்
மணப்பாறை அடுத்த நல்லாம்பில்லையூர், பூசாரிப்பட்டி கிரா-மத்தை சேர்ந்த செல்வி, 44, மகள் அகிலாண்டேஸ்வரி, 21; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், நேற்று முன்தினம், கடவூர் அடுத்த, சிங்கம்பட்டியில் உள்ள கருப்புசாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார்.
மீண்டும் வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் செல்வி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசா-ரித்து வருகின்றனர்

