/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
/
வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
ADDED : ஆக 04, 2024 01:38 AM
கரூர், கரூர் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட வெள்ளியணை, பசுபதிபாளையம், வெங்கமேடு பகுதிகளில் நடந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க, எஸ்.பி., பிரபாகர் உத்தரவுப்படி, தனிப்படை அமைக்கப்பட்டது.
அந்த, தனிப்படை போலீசார், வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக, தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த செல்வராஜ், 36, பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த சிவக்குமார், 23, ஆகிய இரண்டு பேரை, நேற்று கைது செய்தனர்.
வழிப்பறி செய்த பொருட்களை மீட்பதற்காக, அவர்கள் இருவரையும் பல்வேறு இடங்களுக்கு, அழைத்து சென்றனர். அப்போது, செல்வராஜூம், சிவக்குமாரும் தவறி கீழே விழுந்ததில், இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவருக்கும், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.