/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அக்.,22 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்
/
அக்.,22 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்
அக்.,22 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்
அக்.,22 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்
ADDED : அக் 20, 2024 01:52 AM
அக்.,22 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு
தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்
கரூர், அக். 20-
மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்க வரும், 22 முதல் முகாம் நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், மூன்று வகையாக பிரிக்கப்பட்டு மொத்தம், 12,244 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், அடையாள அட்டை உள்ள, ஏ வகை மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள், அலுவலகத்தில் தரவு தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது.ஆனால், பி வகை மாற்றுத்திறனாளிகளின் முழுமையான தகவல்கள், தரவு தளத்தில் சேமிக்கப்படவில்லை. சி வகை மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை இன்றி, புதிய மாற்றுத்திறனாளிகளாக கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டுள்ளனர். சி வகையில் கரூர் மாவட்டத்தில், 922 பேர் உள்ளனர்.
அவர்களுக்கு, மருத்துவ முகாம் நடத்தி தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக வரும், 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் புகழூர் அரசு மருத்துவமனையிலும், 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் கிருஷ்ணராயபுரம் கோவக்குளம் அரசு மருத்துவமனையிலும், 26,29 ஆகிய இரண்டு நாட்கள் கடவூர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையிலும் நடக்கிறது.
நவ., 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் குளித்தலை அரசு மருத்துவமனையிலும், 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும், 13ல் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையிலும், 14ல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், 15ல், மண்மங்கலம் அரசு மருத்துவமனையிலும் நடக்கிறது. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்), நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்க வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.