/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளிக்கு ரூ.2.41 லட்சம் மதிப்புள்ளமேஜை, புத்தக அலமாரி வழங்கல்
/
பள்ளிக்கு ரூ.2.41 லட்சம் மதிப்புள்ளமேஜை, புத்தக அலமாரி வழங்கல்
பள்ளிக்கு ரூ.2.41 லட்சம் மதிப்புள்ளமேஜை, புத்தக அலமாரி வழங்கல்
பள்ளிக்கு ரூ.2.41 லட்சம் மதிப்புள்ளமேஜை, புத்தக அலமாரி வழங்கல்
ADDED : ஏப் 03, 2025 01:36 AM
பள்ளிக்கு ரூ.2.41 லட்சம் மதிப்புள்ளமேஜை, புத்தக அலமாரி வழங்கல்
கரூர்:தவிட்டுப்பாளையம் அரசு தொடக்க பள்ளிக்கு, ரூ.2.41 லட்சம் மதிப்புள்ள மேஜை, புத்தக அலமாரி வழங்கப்பட்டுள்ளது.
புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், ந.புகளூர் ஆகிய பஞ்., பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பினை மேம்படுத்திடவும், பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2.41 லட்சம் மதிப்பீட்டில் இருக்கையுடன் கூடிய மேஜை மற்றும் புத்தக அலமாரி ஆகியவை வழங்கப்பட்டது. இதனை, நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், வழங்கினார்.
நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா உள்பட பலர் பங்கேற்றனர்.