/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா கொடியேற்றம்
/
பள்ளப்பட்டியில் 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா கொடியேற்றம்
பள்ளப்பட்டியில் 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா கொடியேற்றம்
பள்ளப்பட்டியில் 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா கொடியேற்றம்
ADDED : ஏப் 11, 2025 01:23 AM
பள்ளப்பட்டியில் 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா கொடியேற்றம்
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி, மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில், 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்கா உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் திருவிழா, 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டு சந்தனக்கூடு விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வரும், 13ம் தேதி மெளலுாது ஷரீப் ஓதி தப்ரூக் வழங்கும் நிகழ்வு, 14ம் தேதி வாசமாலை ஊர்வலம், 15ம் தேதி முதல் நாள் சந்தனக்கூடு ஊர்வலம், 17ம் தேதி இரண்டாம் நாள் சந்தனக்கூடு ஊர்வலம், 20ம் தேதி ஹத்தம் பாத்திஹா, மெளலுாது ஷரீப் நிகழ்வு நடைபெறும் என, மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்ஹாவினர் தெரிவித்தனர்.