/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3 டூவீலர் திருட்டு:தொழிலாளிகள் புகார்
/
3 டூவீலர் திருட்டு:தொழிலாளிகள் புகார்
ADDED : மே 01, 2024 02:04 AM
குளித்தலை;குளித்தலை நகராட்சி, சுயராஜ புதுதெருவை சேர்ந்தவர் மாரிமுத்து, 65; விவசாயி. இவருக்கு சொந்தமான, 'டி.வி.எஸ்., எக்ஸல்., சூப்பர்' மொபட்டை, கடந்த, 28ல் வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். மீண்டும் வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.
இதேபோல், குளித்தலை காவிரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42; கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான, 'ஹோண்டா யுனிகான்' டூவீலரை, கடந்த, 28 இரவு, 10:00 மணிக்கு, வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். மீண்டும் வந்துபார்த்தபோது, டூவீலர் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த இரு புகார் குறித்து, குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளித்தலை அடுத்த மேட்டு திருக்காம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 51. இவர், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரை, மேட்டு மகாஜனபுரம் சுப்பிரமணியன் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். மீண்டும் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. சுப்பிரமணியன் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.