ADDED : ஆக 30, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் விழாவில்
மோதிய 4 பேர் கைது
சேந்தமங்கலம், ஆக. 30-
சேந்தமங்கலத்தில் கடந்த, 26ல் கோவில் திருவிழாவில் நாடகம் நடந்த போது தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலத்தில் இரு நாட்களுக்கு முன்பு, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, 26 இரவு நாடகம் நடந்துள்ளது. இதை பார்த்து கொண்டிருந்த போது, இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவர் தாக்கப்பட்டதாக கூறியும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடந்தது.
இதை தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சேந்தமங்கலத்தை சேர்ந்த ஜோதீஸ்வரன், நிர்மல்ராஜ், நவீன்குமார், நிசாத் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, நேற்று இரவு சிறையில் அடைத்துள்ளனர்.