sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

50,000 லிட்டர் கொள்ளளவுள்ள நவீன பால் பண்ணை: கரூர் கலெக்டர் தகவல்

/

50,000 லிட்டர் கொள்ளளவுள்ள நவீன பால் பண்ணை: கரூர் கலெக்டர் தகவல்

50,000 லிட்டர் கொள்ளளவுள்ள நவீன பால் பண்ணை: கரூர் கலெக்டர் தகவல்

50,000 லிட்டர் கொள்ளளவுள்ள நவீன பால் பண்ணை: கரூர் கலெக்டர் தகவல்


ADDED : ஜூலை 28, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:''ஆவினில், 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன பால் பண்ணை திறப்பதற்கு தயாராக உள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர், தோரணக்கல்பட்டி ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள நவீன பால் பண்ணையை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில், 144 பிரதான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக, 17,025 லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இதன் மூலம், 4,241 உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில், 15 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மூலம் நாள் ஒன்றுக்கு, 47,515 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, 66 பால் முகவர்கள் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு, 9,000 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் மாதம் ஒன்றுக்கு சராசரியாக, 20 லட்சம் ரூபாய் அளவில் பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் நாளொன்றுக்கு, 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால்பண்ணை நிறுவப்பட்டு உள்ளது. இதில் பால் பதப்படுத்தும் இயந்திரம், நவீன பால் பாக்கெட் இயந்திரம், 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் பால் குளிரூட்டும் அறை போன்றவை நிறுவப்பட்டு உள்ளது.இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில், பால் கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் பால் விற்பனை அதிகரித்துள்ளது. திருமணம் மற்றும் விழாக்களுக்கு உடனடியாக பால் வழங்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.கரூர் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில், கூடுதலாக நவீன புதிய பால் பண்ணை அமைத்திட, 3.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில், 2.64 கோடி ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள் மற்றும் கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. அதன் மூலமாக 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன பால் பண்ணை திறப்பதற்கு தயாராக உள்ளது.இவ்வாறு கூறினார்.ஆவின் துணை பதிவாளர் (பால்வளம்) கணேசன், துணை பொது மேலாளர் துரையரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us