/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
5,077 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ADDED : ஜூன் 30, 2024 02:05 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.
பின் அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா, 1,524 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 851 மெட்ரிக் டன், பொட்டாஷ் 900 மெட்ரிக் டன், என்.பி.கே. 1,802 மெட்ரிக் டன் என மொத்தம், 5,077 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கால்நடைகளின் தீவன மேலாண்மையை பூர்த்தி செய்யும் வகையில், மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும், கறவை மாடுகளுக்கான பராமரிப்பு மேலாண்மை, குடிநீர் மேலாண்மை, தீவன மேலாண்மைக்கான திட்டமிடல், ஆடுகளுக்கான பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 195 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் மணிமேகலை உள்பட பலர் பங்கேற்றனர்.