/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் 69,614 பயனாளிக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து
/
மாவட்டத்தில் 69,614 பயனாளிக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து
மாவட்டத்தில் 69,614 பயனாளிக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து
மாவட்டத்தில் 69,614 பயனாளிக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து
ADDED : ஜூலை 04, 2024 03:02 AM
கரூர்: மாவட்டத்தில், 69,614 பயனாளிகளுக்கு வயிற்-றுப் போக்கு தடுப்பு மருந்து வினியோகம் செய்-யப்பட்டு வருகிறது என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் துணை சுகாதார நிலை-யங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் நக-ரத்தை சுற்றி சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய முக்கிய இடங்களில், வைட்டமின் -'ஏ' முகாம் ஆக., 31 வரை நடக்கிறது. இதில், வயிற்றுப்-போக்கு என்பது ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேலாக தண்ணீர் அல்லது திரவ மலம் கழிப்பது என வரையறுக்கப்படுகிறது. ஐந்து வய-துக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்-றுப்போக்கு முக்கிய காரணமாகும்.
வயிற்றுப்போக்கின் போது குழந்தைகளுக்கு, ஓ.ஆர்.எஸ். கரைசல், துத்த நாக மாத்திரை (ஜிங்க்) மற்றும் போதுமான ஊட்டச்சத்தை உட்-கொள்வதினால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை தடுப்பதன் மூலம் இறப்புகளை தவிர்க்-கலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளில், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் இரண்டு ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்கள், 14 துத்தநாக மாத்திரைகள் வினியோகம் செய்யப்ப-டுகிறது.
இதுவரை, 69,614 பயனாளிகளுக்கு, 1.90 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் சேவை கழகம் மூலமாக, 66 ஆயிரம் ஓ.ஆர்.எஸ். பொட்டலங்களும், 3,37,280 ஜிங்க் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.